ஆன்லைன் பாதுகாப்பு சட்டம் குறித்து ஐ.நா விடுத்துள்ள கோரிக்கை
ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூறுகிறது.
இதன் காரணமாக, சிவில் சமூகம் மற்றும் தொழில்துறையினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்க சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து பரிசீலிக்குமாறு அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு குறித்த அசல் சட்டத்தில் இருந்த பல ஷரத்துக்கள் சபாநாயகர் கையெழுத்திட்ட சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன.
(Visited 15 times, 1 visits today)





