பெர்லின் பள்ளி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல்; சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை !
ஜேர்மன் தலைநகர் பெர்லினில், பள்ளி ஒன்றில் திடீரென ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்.
அந்த தாக்குதலில் ஒரு சிறுமி படுகாயமடைந்துள்ளாள். அவளது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மற்றொரு சிறுமியும் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏழு அல்லது எட்டு வயதான அந்த சிறுமிகள் இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் எதற்காக பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்தினார் என்பது தெரியவரவில்லை.இந்த சம்பவம் பெர்லினில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.





