ஆஸ்திரேலியா இலங்கை

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழர்

நியூசிலாந்து நாட்டின் தேர்தலில் தேசியக் கட்சி தேர்தல் வேட்பாளர் தேசியப் பட்டியலில் ஒரு இலங்கைத் தமிழர். நியுசிலாந்து நாட்டில் ஒக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் சனிக்கிழமை ( 14 ) நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் முன்னாள் நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பிரதிநிதித்துவபடுத்திய ஆளும் தொழில் கட்சிக்கும் எதிர்கட்சியான தேசியக் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளுக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. ஆயினும் சிறு கட்சிகள் துணை கொண்டு தேசியக் கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் அதிகம் என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

இந்தத் தேர்தலில் தேசியக் கட்சி தேசிய வேட்பாளர் பட்டியலில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட பொறியியல் ஆலோசகர் செந்தூரன் அருளாநந்தம் உள்ளார். அவர் இங்கிலாந்து சிங்கப்பூர் அவுஸ்திரேலியா, மற்றும் நியுசிலாந்தில் பெரும் கட்டுமாணப் திட்டங்களில் அலோசகராக பணியாற்றி உள்ளார். இவர் யாழ் புனித ஜோன் கல்லூரி , மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!