ஈரான் நடத்திய தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் படுகாயம்!
 
																																		இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பீர்ஷெபா மருத்துவமனையில் பணிபுரியும் இலங்கை செவிலியர் ஒருவர் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த பெண் இரோஷிகா சதுரங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
அவர் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் விசாரணைக்காக தூதரகக் குழு அனுப்பப்பட்டுள்ளதாக நிமல் பண்டாரா மேலும் கூறினார்.
(Visited 6 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
