ஜெர்மனியில் விளையாட்டினால் ஏற்பட்ட ஆபத்து – 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி
ஜெர்மனியில் கால்பந்தாட்ட வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் பிராங்க்பர்ட் (Frankfurt) நகரில் இடம்பெற்ற அனைத்துலக இளையர் காற்பந்துப் போட்டியில் JFC பெர்லின், Metz அணிகள் பங்கெடுத்தன.
பெர்லின் நகரைச் சேர்ந்த 15 வயதுக் காற்பந்து வீரர் பிரஞ்சுக் குழுவுடன் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து மரணமடைந்தார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞர் ஜெர்மனியின் இளைஞர்களுக்கான அணியில் விளையாட்டு வீரராக இருந்த 15 வயதுடைய இளைஞரை தாக்கி கொலை செய்தார் என சந்தேகம் எழுந்துள்ளது.
அதாவது சர்வதேச இளைஞர் அணிக்கான கால்பந்தாட்ட விளையாட்டு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த 16 வயதுடைய பிரான்ஸ் அணியைச் சேர்ந்தவர் முதலில் வேறு ஒரு நபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
பின்னர் 15 வயதுடைய இளைஞரை பின்புறத்தால் தாக்கியுள்ளார். இறுதியில் ஏற்பட்ட சண்டையில் 15 வயதுக் காற்பந்து வீரர் தலையில் கடுமையாகத் தாக்கட்டார். மூளையில் ஏற்பட்ட காயத்தால் அவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
காற்பந்து வீரர் தலையிலோ கழுத்திலோ அடிக்கப்பட்டபின் அவருக்கு அவசர உயிர்க்காப்புச் சிகிச்சை வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
பிரான்சின் Metz அணியைச் சேர்ந்த 16 வயதுக் காற்பந்து வீரர் கைது செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்திவருவதாக தெரியவந்துள்ளது.