கொழும்பு வந்தது தென்கொரிய போர் கப்பல்
தென்கொரிய கடற்படைக்கு சொந்தமான குவாங்காடோ போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பல்கள் இன்று (26) இலங்கை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
நூற்று முப்பத்தைந்து மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பலில் மொத்தம் இருநூற்று நாற்பத்தி ஒன்பது பணியாளர்கள் இருக்கின்றனர்.
குவாங்கடோ போர்க்கப்பலில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
குறித்த போர்க்கப்பல் நாளை நாட்டில் இருந்து புறப்பட உள்ளது.
(Visited 7 times, 1 visits today)