செய்தி பொழுதுபோக்கு

சற்று முன்னர் வெளியான ஜனநாயகன் திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. ‘ஜனநாயகன்’ படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார்.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் விஜய் பிறந்தநாளை ஒட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு ‘ஜன நாயகன்’ படத்தின் பர்ஸ்ட் ரோர் (கிளிம்ஸ் வீடியோ) வெளியாகி உள்ளது. இதனை சமூகவலைதளங்களில் அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

(Visited 2 times, 2 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content