அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள மனநல மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர்.
ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் ஒருவர் வைத்தியசாலைக்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல்தாரியை சுட்டுக் கொன்றதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த நபரின் கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த போது சுமார் 185 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.