ஆசியா செய்தி

சிங்கப்பூரில் காதலிக்கு தமிழர் செய்த அதிர்ச்சி செயல்

 

சிங்கப்பூரில் காதலியை அடித்துக்கொன்றதை கிருஷ்ணன் என்ற தமிழர் ஒப்புக்கொண்டுள்ளார்.

40 வயதாகும் கிருஷ்ணன் ஏற்கெனவே திருமணமானவர் எனவும் அவர் 2019ஆம் ஆண்டு பலமுறை தாக்கிக் கொன்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

40 வயது சிங்கப்பூரர் மல்லிகா பேகம் ரஹாமான்ஸா அப்துல் ரஹ்மான் என்பவரையே கொலை செய்துள்ளர்.

கிருஷ்ணன் மல்லிகாவை 2015ஆம் ஆண்டு சந்தித்தார். அப்போது முதல் இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கியுள்ளனர்.

எனினும் மல்லிகா மற்ற ஆண்களுடன் பழகுவது கிருஷ்ணனுக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் மதுபோதையில் இருந்தபோது கிருஷ்ணன் கோபத்தில் மல்லிகாவைத் தாக்கினார்.

பலமுறை தாக்கப்பட்டதால் மல்லிகா பேச்சுமூச்சற்றுப் போனார். உடனே சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குக் கிருஷ்ணன் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்தில் மல்லிகாவைப் பரிசோதித்த அதிகாரிகள் அவர் மாண்டதை உறுதிப்படுத்தினர்.

மறுநாள் கிருஷ்ணன் பொலிஸாரிடம் சரணடைந்தார். அவரது வழக்கு ஏப்ரல் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரும். அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 வகை தண்டனைகள் விதிக்கப்படக்கூடும்.

(Visited 25 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி