பிரான்ஸில் வாகனம் ஒன்றை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரான்ஸில் 724 கிலோ கொக்கைன் போதைப்பொருளுடன் பயணித்த வாகனம் ஒன்றினை சுங்கவரித்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இது சமீபத்தில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவு போதைப்பொருள் இதுவென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Guibeville (Essonne) நகரில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
N20 நெடுஞ்சாலையில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், சந்தேகத்து இடமான வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தினர்.
வாகனத்துக்குள் 724 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருள் மறைத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்தனர்.
20 வயது மதிக்கத்தக்க சாரதி சம்பவ இடத்தில் இருந்து வாகனத்தை கைவிட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
அவரை சுங்கவரித்துறையினர் கைது செய்ய முற்பட்டபோதும், சாரதியைக் கைது செய்ய முடியவில்லை.
கைப்பற்றப்பட்ட கொக்கைன் போதைப்பொருளின் மதிப்பு 43 மில்லியன் யூரோக்கள் என சுங்கவரித்துறையினர் கணக்கிட்டுள்ளனர்.