சிங்கப்பூரில் உணவகத்தில் உணவு உட்கொண்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சிங்கப்பூரில் 15 பேருக்கு வயிற்றுக்கோளாற்றை ஏற்படுத்திய உணவகம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
15 பேருக்கு வயிற்றுக் கோளாற்றை ஏற்படுத்திய உணவகத்துக்கு 7,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிடோக் ரோட்டில் Spize நிறுவனத்தின் 2 உணவகங்களில் சாப்பிட்ட சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
சிங்கப்பூர் உணவு அமைப்பும் சுகாதார அமைச்சும் நடத்திய விசாரணையில் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தது தெரியவந்தது.
சமைத்த உணவையும் சமைக்காத உணவுப் பொருள்களையும் ஒழுங்காகப் பிரித்து வைக்காதது, சுத்தமான பலகையில் உணவுப் பொருள்களை வெட்டாதது, சமையலறைக் கழிப்பறையில் சவர்க்காரம் இல்லாதது, போன்ற குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டன.
கடைகளில் உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்தும்படி சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டது.