அமெரிக்காவில் லட்ச கணக்கான அரசாங்க ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவில் அரசாங்க ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஊடுருவப்பட்டுள்ளது.
237,000 பேரின் தகவல்கள் ஊடுருவப்பட்டுள்ளதாக இதுவரையில் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் போக்குவரத்துத் துறை அந்தத் தகவல்களை வெளியிட்டது. சில போக்குவரத்துச் செலவுகளைக் கையாளும் கட்டமைப்பில் அரசாங்க ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கியிருக்கின்றன.
ஆனால் அந்தத் தகவல்கள் குற்றவியல் காரணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஊடுருவல் சம்பவத்துக்கு யார் காரணம் என்பதும் இன்னும் தெரியவில்லை.
இதற்கு முன்னரும் அமெரிக்க அரசாங்க ஊழியர்களுடன் அமைப்புகளும் ஊடுருவல்களுக்கு இலக்காகியிருக்கின்றன.
(Visited 1 times, 1 visits today)