மலேசியாவில் காருக்குள் உறங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
மலேசியாவில் நபர் ஒருவர் காரோடு நடுக்கடலில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலாக்கா (Malacca) மாநிலத்திலுள்ள கிளேபாங் (Klebang) நகரின் கடற்கரையில் அலைப்பெருக்கின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தூக்கக் கலக்கத்தில் இருந்த அந்த 38 வயது நபர் ஒருவர் ஓய்வெடுப்பதற்காகக் கடற்கரையின் முன்பாகக் காரை நிறுத்தியுள்ளார். ஆனால் காரின் கை பிரேக்கை எடுத்துவிட அவர் மறந்ததால் கடல் நீர்மட்டம் அதிகரித்த போது அது மலாக்கா நீரிணைக்குள் சென்றுவிட்டது.
கடந்த 28ஆம் திகதி அதிகாலை 5 மணிக்குக் கண்விழித்தபோது தாம் காருடன் நடுக்கடலில் இருப்பதைக் கண்டு அந்த நபர் அதிர்ச்சியடைந்தார்.
எனினும் அவர் காயங்கள் இன்றி வாகனத்திலிருந்து தப்பியதாகக் காவல்துறை கூறியது. அந்த நபர் மலேசியாவில் பலசரக்குக் கடை நடத்திவரும் வெளிநாட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
அந்தக் கார் அவருக்குச் சொந்தமானது என்றும் அவரிடம் முறையான ஓட்டுநர் உரிமம் இருப்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. நடுக்கடலில் இருந்த கார் கரைக்கு இழுத்துவரப்பட்டுள்ளது.