பிரான்ஸ் தலைநகரில் குடும்பம் ஒன்றுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பரிஸ் 3 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர் குடும்பத்தினரைக் கட்டி வைத்து தாக்கி கொள்ளையடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தம்பதியினர் இருவர், அவர்களது மகள் மற்றும் பேத்தி ஆகிய நால்வர் கொண்ட மொத்த குடும்பத்தினரையும் கட்டி வைத்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முக்கியமான பொருட்களை கொள்ளையிட்டனர்.
இதில் குறித்த ஆணை சுத்தியல் ஒன்றினால் கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர்.
காலை 5 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்தினை வந்தடைந்த போது அங்கு நிலமை கைமீறிச்சென்றிருந்தது.
கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், தாக்கப்பட்ட நபர் அதிக இரத்தப்போக்குடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
(Visited 17 times, 1 visits today)