சென்னையில் அடுத்தடுத்து கரையொதுங்கிய சடலங்களால் பரபரப்பு!
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் இன்று கரை ஒதுங்கியுள்ளன.
இலங்கை அகதிகள் முகாமை சேர்ந் ஒரு கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடலில் விளையாடச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்றச் சென்ற மற்ற பெண்களும் பலியாகியுள்ளனர்.
அவர்களின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஷாலினி, தேவகி செல்வம், பவானி, காயத்திரி ஆகியோரின் உடல்களே இவ்வாறு கரையொதுங்கியுள்ளன.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 3 times, 1 visits today)





