பிரான்ஸில் 15 வயது சிறுவனால் ஏற்பட்ட பரபரப்பு
பிரான்ஸில் 15 வயதுடைய சிறுவன் ஒருவன், 180 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனம் செலுத்திய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.
A13 நெடுஞ்சாலையில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மின்னல் வேகத்தில் பயணித்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தினர். குறித்த கார் 90 கி.மீ வேகம் உள்ள குறித்த சாலையில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பயணித்துள்ளது.
காரை தடுத்து நிறுத்திய பொலிஸார் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மகிழுந்தைச் செலுத்தியது 15 வயதுடைய சிறுவன் ஒருவர் என தெரியவந்துள்ளது. உடனடியாக அவர் கைதுசெய்யப்பட்டார்.
19 வயதுடைய பெண் ஒருவரும் காருக்குள் இருந்துள்ளார். குறித்த கார் அப்பெண்ணினுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 20 times, 1 visits today)





