பாங்காக்கில் திடீரென உள்வாங்கிய பாதை : தடைப்பட்ட போக்குவரத்து!

பாங்காக்கில் ( Bangkok ) சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. ஆனால் மூன்று வாகனங்கள் சேதமடைந்தன என்று பாங்காக் ஆளுநர் சாட்சார்ட் சிட்டிபண்ட் கூறினார்.
நிலத்தடி ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
குறித்த பள்ளம் பெரிதாகியமையால் நான்கு வழிச்சாலை முற்றிலுமாக தடைப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுது்து சாரதிகள் பாதைகளை மாற்றி பயணிக்க வலியுறுத்தப்பட்டதுடன், நீண்ட தாமதங்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.
பாங்காக் நகர அதிகாரிகள் மருத்துவமனையின் கட்டமைப்பு பாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். இருப்பினும் அருகிலுள்ள மருத்துவமனை இரண்டு நாட்களுக்கு வெளிநோயாளர் சேவைகளை மூடுவதாகக் கூறியது.
மேலும் காவல் நிலையம் மற்றும் அருகிலுள்ள பிற கட்டிடங்களில் இருந்து மக்களை வெளியேற்ற உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.