ஸ்பெயினில் 500 ஆண்டுகளாக இடைவிடாமல் இயங்கும் உணவகம்
ஸ்பெயினில் உணவகம் ஒன்று தொடர்ந்து 500 ஆண்டுகளாக இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்றில் இடம்பிடித்திருக்கும் அந்த ஹொஸ்டால் டி பினோஸ் (Hostal de Pinos) உணவகம் கட்டலோனியா வட்டாரத்துக்கு மத்தியில் அமைந்துள்ளது.
16ஆம் நூற்றாண்டில் யாத்ரிகர்களுக்கு உணவும் தங்கும் வசதியும் வழங்குவதற்காக அது தொடங்கப்பட்டது.
1677ஆம் ஆண்டிலிருந்து கட்டடத்தில் எந்த மாற்றமும் இல்லை. உணவகத்தின் வாடிக்கையாளர்கள் அந்தக்காலத்துக்கே செல்வதாக உணர்கின்றனர்.
அந்த உணர்வை வேறெங்கும் பெற்றதில்லை என சிலர் தெரிவித்துள்ளனர். மொனிக்கா செகீஸ் (Monica Segues) குடும்பத்தினர் 20 ஆண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
உணவகத்தின் 500ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாடும் வாய்ப்பைப் பெற்றதில் குடும்பத்தினருக்குப் பேரானந்தம் என குறிப்பிட்டுள்ளனர்.