எல்ல பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
எல்ல பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





