பிரேசிலில் தீயில் இருந்து தப்பிக்க ஜன்னல் வழியாக குதித்த கர்ப்பிணி பெண்!

பிரேசிலில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வீட்டில் வசித்து வந்த கர்பிணி பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோர் தங்கல் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிரிழந்துள்ளனர்.
குறித்த தீ விபத்தானது அடுத்தடுத்த கட்டடங்களுக்கும் பரவிய நிலையில், 12 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தீயை அணைப்பதற்காக ஏறக்குறைய 40 தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 33 times, 1 visits today)