பிலிப்பைன்ஸின் வடக்கு தீவுகளை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி!
பிலிப்பைன்ஸின் வடக்கு தீவுகளை ஒரு சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்காரணமாக பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், படகு சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டைஃபூன் க்ராத்தான் கடைசியாக ககாயன் மற்றும் படானேஸ் மாகாணங்களுக்கு அப்பால் உள்ள பாலிண்டாங் தீவின் கடலோர பகுதிகளை தாக்கியதாக கூறப்படுகிறது.
வடகிழக்கு திசையில் தைவான் நோக்கி நகரும் போது அது ஒரு சூப்பர் சூறாவளியாக வலுவடையும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உயிர்சேதம் அல்லது சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.
(Visited 10 times, 1 visits today)





