ஜெர்மனியில் நிர்வாணமாக வெயிலில் இளைப்பாற அனுமதி பெற்ற நபர்

ஜெர்மனியின் Frankfurt நகரிலுள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்றின் உரிமையாளர் அதில் நிர்வாணமாக வெயிலில் இளைப்பாற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கட்டடத்தின் உரிமையாளர் அடிக்கடி நிர்வாணமாக வளாகத்தில் ஓய்வெடுப்பதால் அங்கு வாடகைக்கு இருக்கும் நிறுவனம் ஒன்று அவருக்கு வாடகை தர மறுத்துள்ளது.
அந்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டார் கட்டட உரிமையாளர்.
விலையுயர்ந்த குடியிருப்பு வட்டாரத்தில் இருக்கும் அந்தக் கட்டடத்தின் மாடிப்படிகளிலிருந்து தோட்டம் வரை அதன் உரிமையாளர் அடிக்கடி நிர்வாணமாக நடந்து சென்றதாக நிறுவனம் புகார் அளித்தது.
இருப்பினும், சட்டக்குழு ஒன்று கட்டட வளாகத்துக்குச் சென்று கண்காணித்தபோது, உரிமையாளர் அவ்வாறு நடந்துகொள்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
மாறாகத் தாம் எப்போதுமே குளியல் ஆடையை அணிவதாகக் கட்டட உரிமையாளர் கூறியிருக்கிறார். மேலும் அவர் குறிப்பிட்ட இடத்தில் வெயிலில் குளிர்காய மட்டுமே ஆடைகளை முழுமையாக அகற்றுவதாகவும் அவர் சொன்னார்.
உரிமையாளரின் செயல் கட்டடத்தின் பயன்பாட்டைப் பாதிக்காது என்பதால் நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்ததாக தெரிவி்கப்படுகின்றது.