ஜனவரி மாதம் வானத்தை ஒளிரச் செய்ய காத்திருக்கும் கிரகங்களின் அணிவகுப்பு
அடுத்த இரண்டு வாரங்களில், நான்கு கிரகங்கள் – வீனஸ், சனி, வியாழன் மற்றும் செவ்வாய் , பார்வையாளர்களுக்கு விருந்தளிக்க உள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், வீனஸ் மற்றும் சாட்டன் கிரகம் இரண்டும் ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இதுவரை இல்லாத வகையில் விரல் அளவிற்கு நெருங்கி வர உள்ளது.
டிசம்பர் 2024 முழுவதும், செவ்வாய் கிரகம் சீராக பிரகாசமாகி இருந்து வருகிறது, இது ஜனவரி 15-16, 2025-ல் கண்களுக்கு புலப்படும் வகையில் ஒளிரும்.
இந்த நேரத்தில், செவ்வாய் கிரகம் ஜெமினி விண்மீன் மண்டலத்தில் -1.4 அளவுகளில் பிரகாசமாக ஒளிரும், இது வெறும் கண்களுக்கு எளிதில் தெரியும். செவ்வாய்க்கு கூடுதலாக, வியாழன் மேல்நோக்கி உயரும், அதே நேரத்தில் வீனஸ் மற்றும் சனி தென்மேற்கில் அமைந்திருக்கும்.
(Visited 1 times, 1 visits today)