தோனி விளையாடுவதில் புதிய ட்விஸ்ட்
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இடம் பெறுவாரா? என்ற கேள்வி நீண்ட காலமாகவே உள்ளது.
தற்போது 43 வயதாகும் நிலையில் தோனி 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? இல்லையா? என அவரது ரசிகர்கள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.
2025 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன் ஒவ்வொரு அணியிலும் இரண்டு முதல் நான்கு வீரர்கள் மட்டுமே தக்க வைக்க முடியும் என்ற நிலை உள்ளது.
அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி தக்க வைக்கப்படுவாரா அல்லது நீக்கப்படுவாரா என்ற சந்தேகம் உள்ளது.
இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக ஒரு முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி வெறும் இரண்டு வீரர்களை மட்டும் தான் தக்க வைக்க முடியும் என பிசிசிஐ அறிவித்தாலும் கூட தாங்கள் மற்ற வீரர்களை நீக்கிவிட்டு தோனியை தக்க வைக்க தயாராக இருப்பதாக கூறி இருக்கிறது.
ஐபிஎல் ஏலமோ அல்லது வேறு ஐபிஎல் விதிகளோ, தோனி சிஎஸ்கே அணியில் இடம் பெறுவதை தடுக்க முடியாது என சிஎஸ்கே நிர்வாகம் உறுதியாக கூறி இருக்கிறது.
இதற்கு முன் சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே மற்றும் மதிஷா பதிரானா அல்லது டெவான் கான்வே ஆகியோரில் நால்வர் தக்க வைக்கப்படுவார்கள் என கூறப்பட்டு வந்தது.
அந்த நான்கு வீரர்களை தவிர்த்து கூடுதலாக ஐந்து அல்லது ஆறு வீரர்களை தக்க வைக்கலாம் என பிசிசிஐ அறிவித்தால் மட்டுமே தோனி தக்கவைக்கப்படுவார் எனக் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தான் சிஎஸ்கே நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. ஆனால், இதில் ஒரு சிக்கலும் உள்ளது.
தான் 2025 ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என தோனி தங்களிடம் தெரிவித்தால் மட்டுமே இதை செய்ய முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.
எனவே, 2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது அவரது கையில்தான் உள்ளது.
அவர் விளையாட வேண்டும் என முடிவு எடுத்து விட்டால் சிஎஸ்கே நிர்வாகம் அதை எப்படியாவது செய்ய தயாராக உள்ளது என்பதுதான் இப்போதைய நிலைமை.
அதற்காக முக்கிய வீரர்களான ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதீஷா பதிரானா ஆகியோரை இழக்கவும் சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.