வர்த்தகர் தினேஷ் மரணம் குறித்து எழுந்துள்ள புதிய சந்தேகம்
கோடீஸ்வர தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் ஆயுள் காப்பீட்டுத் தொகையை பெறுவதற்காக அல்லது அவரது சொத்தை பெறும் நோக்குடன் அவருக்கு நெருக்கமான ஒருவர் அவரை கொலை செய்தாரா என்ற பல கோணத்தில் விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தினேஷ் ஷாப்டரின் மரணம் ஒரு குற்றச் செயல் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், கொலையாளிகளை கண்டறிய கொலை மற்றும் கொள்ளை விசாரணைப் பிரிவு விசாரணையைத் ஆரம்பித்துள்ளது.
சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பல கோடி ரூபாய்க்கான ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக, ஷாப்டரின் நெருங்கிய உறவினர் ஒருவர் இந்தக் கொலையைச் செய்தாரா என, விசாரணை அதிகாரிகள் தற்போது சந்தேகிக்கின்றனர்.
கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, ஷாப்டருக்கான காப்புறுதி இழப்பீட்டுத் தொகையை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு காப்புறுதி நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அண்மையில் உத்தரவிட்டார்.
ஷாப்டரின் மரணம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவர் குழுவின் உறுப்பினர்கள், இது தொடர்பான அறிக்கை குறித்து கொலை மற்றும் கொள்ளை விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.