சிங்கப்பூரில் அமுலுக்கு வரும் புதிய திட்டம்
சிங்கப்பூரில் சில்லறை வர்த்தகத் தொழில்துறைக்கான புதுப்பிக்கப்பட்ட மின்னிலக்கத் திட்டத்தை
அறிமுகம் செய்துள்ளன.
Enterprise Singapore அமைப்பும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
வாடிக்கையாளர் அனுபவம், செயல்பாட்டுத் திறன், வர்த்தக வளர்ச்சி ஆகிய 3 முக்கிய அம்சங்களில் மின்னிலக்கத் தீர்வுகளைக் கொண்டுவருவதில் திட்டம் கவனம் செலுத்தும்.
வர்த்தகர்கள் புதிய சவால்களைச் சமாளிக்கவும் வாய்ப்புகளைப் பெறவும் மின்னிலக்கத் தீர்வுகள் கைகொடுக்கும்.
அவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்கும்போது மேலும் சிறந்த அனுபவத்தைப் பெறுவர்.
வர்த்தக, தொழில் துணையமைச்சர் லோ யென் லிங் (Low Yen Ling) புதுப்பிக்கப்பட்ட திட்டத்தை அறிவித்தார்.
(Visited 17 times, 1 visits today)





