சிங்கப்பூரில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை

சிங்கப்பூரில் கழக வீடுகளில் பூனைகளை வளர்ப்பதற்கு புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
அதற்கமைய, பூனை வளர்ப்பவர்கள் உரிமம் பெறுவதற்கான புதிய கட்டமைப்பு செப்டம்பர் முதல் திகதி ஆரம்பிக்கப்படும்.
அமுலாகும் முன்னோட்டத் திட்டம் 2 ஆண்டுகளுக்கு நடப்பிலிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய, புதிய கட்டமைப்பின்படி கழக வீடுகளில் அதிகபட்சம் 2 பூனைகளை வைத்துக்கொள்ளலாம். உரிமையாளர்கள் பூனைகளுக்கு உரிமம் பெறவேண்டும். நுண்சில்லு அடையாளமும் பொருத்தவேண்டும். தனியார் வீடுகளில் வசிப்போர் அதிகபட்சம் 3 பூனைகள் அல்லது 3 நாய்கள் அல்லது அவற்றில் ஏதேனும் 3 பிராணிகளை வளர்க்கலாம்.
2026 ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை பூனை வளர்க்கும் உரிமம் பெறக் கட்டணமில்லை. அதன்பிறகும் உரிமம் பெறாமல் இருப்பது குற்றமாகும். வளர்ப்புப் பூனைகளுக்குக் கருத்தடை செய்ய ஊக்குவிக்கப்படுகிறது.
குறைந்த வருமானக் குடும்பத்தினர் பூனைகளுக்குக் கருத்தடை செய்யவும், நுண்சில்லு பொருத்தவும் விலங்கு மற்றும் விலங்கியல் மருத்துவச் சேவை அமைப்பின் உதவியை நாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.