ஈரானில் உடனடியாக அமுலுக்கு வரும் புதிய தடை!
மழலையர் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் அரபு உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மொழிகளையும் கற்பிக்க ஈரான் தடை விதித்துள்ளது
குறித்த தடை உத்தரவானது உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் அந்நாட்டின் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறு வயதில், குழந்தையின் ஈரானிய அடையாளம் உருவாக்கப்படுகின்றது என கல்வி அமைச்சக அதிகாரி மசூத் தெஹ்ரானி-ஃபர்ஜாத் தெரிவித்தார்.
ஈரானில் பாரசீகம் மட்டுமே அதிகாரப்பூர்வ மொழி. ஜூன் 2022 இல், ஈரானின் கல்வி அமைச்சகம், “ஆங்கில மொழியின் ஏகபோகத்தை ஒழிக்க” நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் “பிரெஞ்சு மொழியைக் கற்பிப்பதற்கான சோதனையை” தொடங்குவதற்கான அதன் திட்டத்தை ஆரம்பித்தது.
இந்த முடிவு தெஹ்ரானில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் நிறுவனங்கள் உட்பட சில சர்வதேச பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையில் திடீர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.