ஓஹியோவில் ஒன்று திரண்ட நியோ-நாஜி குழு
முகமூடி அணிந்த ஒரு குழு கருப்பு உடை அணிந்து, சிவப்பு ஸ்வஸ்திகாக்களுடன் கருப்புக் கொடிகளை ஏந்தியபடி அணிவகுப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இது மாநில மற்றும் நகர அதிகாரிகளிடமிருந்து விரைவான கண்டனத்தை ஈர்த்தது.
அணிவகுப்பின் போது, இன அவதூறுகளைக் கூச்சலிட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓஹியோ கவர்னர் மைக் டிவைன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தார் மற்றும் சமூக ஊடகங்களில் வெறுப்பை வெளிப்படுத்தினார்.
“வெறுப்பு, மதவெறி, வன்முறைக்கு இந்த மாநிலத்தில் இடமில்லை, எங்கும் அதை கண்டிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.





