திருகோணமலையில் சில்லறை கடை உரிமையாளருக்கு மர்ம நபரால் நேர்ந்த கதி
கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரக்கஹவெவ பகுதியில் சில்லறை விற்பனைக் கடை உரிமையாளர் தொண்டை அறுக்கப்பட்ட நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (07) அதிகாலை இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் சில்லறை கடை ஒன்றினை நடாத்தி வரும் 62 வயதுடைய ஆர். சந்திரதாசவின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத ஒருவர் நுழைந்து கூர்மையான ஆயுதத்தால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சந்திரதாச, தற்போது திருகோணமலை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக கோமரங்கடவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





