செய்தி

அமெரிக்காவில் 6 வயது மகனை கொன்றுவிட்டு இந்தியா தப்பி சென்ற தாய்

அமெரிக்காவில் 6 வயது மகனை கொன்றுவிட்டு இந்தியா தப்பி சென்ற தாய் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸில் எவர்மென் பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்தவர் நோயல் என்ற 6 வயதான மாற்றுத்திறனாளி சிறுவன் கடந்த ஆண்டு நவம்பர் முதல் காணவில்லை என்று அக்கம்பக்கத்தினர் புகார் எழுப்பினார்கள்.

இதனை தொடர்ந்து பொலிஸார் விசாரணையை தொடங்கினார்கள். இந்நிலையில் நோயாலின் தாய் சிண்டி சிங் என்ற 37 வயதான வளர்ப்பு தந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் திடீரென அமெரிக்காவை விட்டு வெளியேறி இந்தியா சென்றுவிட்டனர்.

சிண்டி சிங்கின் 10 குழந்தைகளுள் நோயலும் ஒருவன். 3 குழந்தைகள் தாத்தா பாட்டியிடம் வளர்ந்து வரும் நிலையில் கடந்த மார்ச் முதல் 6 குழந்தைகள், கணவர் ஹர்தீப் ஆகியோருடன் சிண்டி இந்தியாவில் இருக்கிறார்.

நோயலின் சடலம் இன்னும் கண்டறியப்படவில்லை. அதே நேரத்தில் அவர் உயிரோடு இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை.

எனவே நோயலை சிண்டி கொலை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும் காயங்களை ஏற்படுத்தியது, குழந்தையை கைவிட்ட குற்றச்சாட்டுக்களும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

எனவே சிண்டி, ஹர்தீப் ஆகியோரை கண்டறிந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி