பிரித்தானியாவில் இந்தியரின் ஹோட்டலை சூறையாடிய கொள்ளைக்கும்பல் – பரபரப்பு சம்பவம்

பிரித்தானியாவில் சவுத்தாம்ப்டன் நகரத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அங்கித் வகேலா என்றவரின் ஹோட்டலில் பாரிய கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் குறித்த ஹோட்டல் கொள்ளைக்குழுவினரால் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு தனது ஹோட்டலை தொடங்கிய அங்கித் வகேலா, சிறந்த இந்திய உணவுகளை வழங்குவதன் மூலம் பிரபலமாகிறார்.
சமீபத்தில் பிரித்தானிய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்காக பிரித்தானியாவுக்கு வந்திருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் உட்பட, இவரது உணவகத்தில் சென்று உணவருந்தியதையடுத்து ஹோட்டல் அதிக பிரபலத்தை பெற்றது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவுப்பொழுதில் முகமூடியுடன் வந்த ஒரு கொள்ளைக் கும்பல் ஓட்டலுக்குள் நுழைந்து பல பொருட்களை களவாடிச் சென்றதாக அங்கித் வகேலா கூறுகிறார்.
சம்பவம் தொடர்பாக அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.