மொரட்டுவை பிரதேசத்தில் நடுத்தர வயது பெண் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை!
மொரட்டுவை, இந்திபெத்த பெக்வத்த பகுதியில் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையை செய்த நபர் மொரட்டுமுல்ல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு, கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் சிறையில் இருந்த போது மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்த கணவரின் உறவினர் ஒருவரால் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
(Visited 14 times, 1 visits today)





