இஸ்ரேலின் ஜனாதிபதி கீர்ட் வைல்டர்ஸ் இடையே முக்கிய சந்திப்பு
இஸ்ரேலின் ஜனாதிபதி, ஐசக் ஹெர்சாக், நெதர்லாந்திற்கு பயணம் செய்துள்ளார்.
அங்கு அவர் வார இறுதியில் நாட்டில் முதல் ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
இன்று காலை, இஸ்லாம்-எதிர்ப்பு சுதந்திரக் கட்சியின் தலைவரான Geert Wilders ஐ அவர் சந்தித்தார்,.
சந்திப்பு தொடர்பில் வைல்டர்ஸ் தெரிவித்துள்ளதாவது”’நான் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் உடன் ஆம்ஸ்டர்டாமில் ஒரு சிறந்த சந்திப்பை நடத்தினேன். அவர் நெதர்லாந்திற்கு வருகை தந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன் என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு எனது முழு ஆதரவு உண்டு என்றும் எப்போதும் இருக்கும் என்றும் நான் அவரிடம் கூறினேன்” என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்:
(Visited 4 times, 1 visits today)