வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுவது 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் மட்டும் 28,344 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளனர்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களின் எண்ணிக்கை 25,716 என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பித்த இலங்கையர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 40,109 ஆகும். இதில் 99,939 பெண் பணியாளர்களும் உள்ளடங்குவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)