இலங்கை

இலங்கையில் உயிரை காப்பாற்றிக் கொள்ள பொலிஸ் நிலையம் சென்றவர் மரணம்

மில்லனிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் நேற்று இரவு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல தடவைகள் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு வந்து, பொலிஸாரின் தலையீட்டில் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்டவர் மில்லனிய கிம்மன்துடாவ பிரதேசத்தை சேர்ந்த திருமணமானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையைச் செய்யப்பட்ட நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பணத் தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இதுவரை நடைபெற்ற விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மில்லனிய நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் மகேஷ சில்வா தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!