இத்தாலியில் ஒரு வயது குழந்தையுடன் மலையேற்றத்தில் ஈடுபட்ட நபர் : அதிர்ச்சியில் பார்வையாளர்கள்!
இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள ட்ரெண்டினோ-ஆல்டோ அடிஜ் பகுதியில் உள்ள டோலமைட் மலைகளில் சுற்றுலா பயணிகள் ஏறுவது வழக்கம்.
அந்தவகையில் நபர் ஒருவர் தனது ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த மலைப்பகுதியில் கீழ் 9000 வீழ்ச்சி காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிர்ஷடவசமாக இருவரும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.





