உலகம் செய்தி

சீனாவில் 30 வருடங்களான முன்னாள் காதலியை தேடும் காதலன்! கடனை கொடுக்க திண்டாட்டம்

சீனாவில் லீ (Li) என்ற நபர் ஒருவர் தனது முன்னாள் காதலியிடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்காக அவரை தேடி வருகிறார்.

கடனை கொடுத்த முன்னாள் காதலியான மாவை (Ma), அவரது முன்னாள் காதலன் லீ (Li) என்பவர் தேடி வருவதாக South China Morning Post நிறுவனம் தெரிவித்துள்ளது.

1991ஆம் ஆண்டு இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய போது, காதல் உறவு ஏற்பட்டுள்ளது.

சுமார் 8 வருடங்கள் நீடித்த அவர்களின் காதல் உறவு, குடும்ப சூழ்நிலை காரணமாக முறிவடைந்துள்ளது.

எனினும், நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க லீ முயற்சித்த போது, அவருக்கு உதவியாக மா 10,000 யுவான் கொடுத்து உதவி செய்துள்ளார்.

இவ்வாறான நிலையில், 30 ஆண்டுகளின் பின்னர் முன்னாள் காதலியை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் லீ ஈடுபட்டுள்ளார்.

சீனாவில் தற்போது எங்கும் வளர்ச்சி அடைந்த பகுதிகளாக மாறியுள்ள நிலையில், முன்னாள் காதலியின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாத நிலையில் லீ உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் காதலியின் தொலைபேசி இலக்கத்தை தவறவிட்ட நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஊடாக முன்னாள் காதலியுடன் தொடர்பை ஏற்படுத்த லீ முயற்சித்து வருகிறார்.

இவ்வாறான நிலையில், லீயின் செயற்பாட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

அதேவேளை, முன்னாள் காதலியிடம் பெற்ற பணத்தை, தற்போதைய பெறுமதியில் 100,000 யுவானாக செலுத்த வேண்டும் எனவும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(Visited 9 times, 9 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!