கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு கார்!
கொழும்பிலிருந்து கல்கிஸ்ஸ நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
தெஹிவளை மேம்பாலத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை தீப்பற்றி எரிந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தின் போது சாரதி காரிலிருந்து வெளியே குதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவளை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் இணைந்து தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.





