இஸ்ரேலிய அமைச்சரவையில் இருந்து விலகிய முக்கிய அமைச்சர்
இஸ்ரேலிய அமைச்சரவையில் ஒரு அமைச்சர் பென்னி காண்ட்ஸ் அவசரகால அரசாங்கத்திலிருந்து திடீரென விலகியுள்ளார்.
காசா பகுதிப் படையெடுப்பின் திட்டமிடல் பிழைகளை அவர் முன்பு அம்பலப்படுத்தினார்.
எனினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.
நேற்று டெல் அவிவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பதவி விலகுவதாக அறிவித்த பென்னி காண்ட்ஸ், பொதுத் தேர்தலுக்கான தேதியை நிர்ணயம் செய்யுமாறு நெதன்யாகுவிடம் கேட்டுக் கொண்டார்.
கடந்த அக்டோபரில் ஹமாஸ் இஸ்ரேலை தாக்கி 1,200க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை பிடித்த பிறகு, அந்நாட்டில் போர் நிலையை அறிவித்து, அவசரகால அரசாங்கத்தையும், போர் அமைச்சரவையையும் அறிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸுக்கு அமைச்சர் பதவியும் கொடுத்தது.
(Visited 9 times, 1 visits today)