சவுதி அரேபியாவில் பிரமாண்டமாக உருவாகிவரும் பாலைவன நகரம் : பின்னணியில் இருக்கும் மர்மம்!
சவுதி அரேபியாவின் பாலைவனத்தில் 106 மைல் நீளமுள்ள மெகா நகரத்தை உருவாக்க அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் குறித்த திட்டத்திற்காக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அவ்வாறு வெளியேற மறுக்கும் மக்களை கொல்ல துருப்புகளுக்கு உத்தரவிடப்படலாம் என சவுதியில் இருந்து நாடு கடத்தப்பட்ட உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
1 டிரில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள பாலைவன மெகா நகரத்தை உருவாக்குவதற்காக நாட்டின் அரசாங்கம் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மானால் வடிவமைக்கப்பட்ட இந்த திட்டமானது புதிய உலக சுற்றுச்சூழல் நகரமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நியோம் ‘தி லைன்’ மூலம் உருவாக்கப்படும் இந்த திட்டமானது 170 கிமீ பரப்பளவில் பரவியிருக்கும் ஒரு நேரியல் வளர்ச்சியாகும்.
இதன் மூலம் நான்கு பகுதிகள் 20 நிமிட அதிகபட்ச நிலத்தடி பயணத்தின் மூலம் இணைக்கப்படும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம் பல நன்மைகள் இருந்தாலும், பரந்த அளவிலான கண்ணாடி மற்றும் உலோக கட்டமைப்புகள், கடைகள் மற்றும் குடியிருப்புகளில், ஒரு இருண்ட ரகசியம் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.