கியூபெக்கில் பாடசாலையொன்றின் கழிப்பறையில் பொருத்தப்பட்டிருந்த இரகசிய கமரா

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் கட்டினாயூவில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் கழிப்பறையில் இரகசிய கமரா பொருத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
ஆரம்ப பாடசாலையொன்றின் கழிப்பறையில் இவ்வாறு இரகசிய கமரா பொருத்தப்பட்டுள்ளது.
கட்டினாயூ பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க பொலிஸார் விரைந்துள்ளனர்.பொலிஸார் குறித்த கமராவை மீட்டு உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரகசிய கமரா எவ்வளவு காலம் கழிப்பறையில் பொருத்தப்பட்டிருந்தது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை.
சில வாரங்களுக்கு முன்னதாக இதே பாடசாலை கழிப்பறையில் தீ மூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் 12 வயதுக்கும் குறைந்த இரு மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 19 times, 1 visits today)