இலங்கை

இலங்கையில் குடும்ப தலைவிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையில் மதுபானத்தின் விலைகள் இன்று (சனிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் வழங்கிய உத்தரவின் பேரில் இந்த வரித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கலால் வரி அதிகரிக்கப்பட்டதை அடுத்து அனைத்து வகையான மதுபானங்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி,  அனைத்து வகையான பீர் போத்தல்களின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 750 மில்லிலீற்றர் போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சிகரெட்டுக்களுக்கான விலையும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!