இந்தியாவில் பள்ளி மாணவர்கள் அருந்தும் நீர் தொட்டியில் விஷம் கலந்த குழு – 11 குழந்தைகள் மருத்துவமனையில்!

தென்னிந்தியாவின் கர்நாடகாவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் விஷம் கலந்த குடிநீரை குடித்ததால் பல குழந்தைகள் நோய்வாய்ப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, மாநிலத்தின் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த இந்து வலதுசாரிக் குழுவான ஸ்ரீராம் சேனேவின் உள்ளூர்த் தலைவர் உட்பட மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
முஸ்லிம் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தும் முயற்சியில், ஹூலிகட்டி கிராமத்தில் உள்ள பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீராம் சேனே தலைவர் சாகர் பாட்டீல் மற்றும் மற்றொரு குற்றவாளி என்று கூறப்படும் நாகங்கவுடா பாட்டீல் ஆகியோர் கிருஷ்ணா மதார் என்ற உள்ளூர்வாசியை அவரது மதங்களுக்கு இடையேயான உறவு தொடர்பாக மிரட்டி, பள்ளியின் நீர் விநியோகத்தில் விஷம் கலக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மதார் மூன்று வகையான பூச்சிக்கொல்லிகளை வாங்கி, ஒரு ஜூஸ் பாக்கெட்டில் கலந்து, ஒரு இளம் மாணவனை தண்ணீர் தொட்டியில் ஊற்றும்படி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.