ஐரோப்பா கருத்து & பகுப்பாய்வு

பூமியை நோக்கி வரும் பெரும் ஆபத்து – பாபா வங்காவின் கணிப்பு உண்மையாகுமா?

தற்போது பூமியை நெருங்கி வரும் சக்திவாய்ந்த சூரியப் புயல், பல்கேரியாவின் பிரபல கணிப்பாளர் பாபா வங்காவின் கணிப்புடன் தொடர்புபட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ளார்.

அவரின் கணிப்பின்படி பல விடயங்கள் நடந்துள்ள நிலையில், இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பூமியை நெருங்கும் இந்தச் சக்திவாய்ந்த புயலை, ஆட்கொல்லிப் புயல் (Cannibal Storm) என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

சூரியனில் இருந்து வந்த இரண்டாவது புயல், மெதுவாகச் சென்ற முதல் புயலுடன் இணைந்து இன்னும் வேகமாக மாறி பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் மிகப்பெரிய புயலாக இது மாறக்கூடும் என்றும், G5 எனப்படும் உச்சத்தை அடையலாம் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தகவல்தொடர்பு வலைப்பின்னல்கள், ஜி.பி.எஸ் (GPS) சேவைகள் மற்றும் செயற்கைக்கோள்கள் ஆகியவற்றில் இந்தச் சூரியப் புயல் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், விண்வெளி வானிலை அவதானிப்புகள் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்புகளில், ஐரோப்பாவில் தீவிரமான மோதல், ஜனாதிபதி புட்டின் தலைமையின் கீழ் ரஷ்யாவின் உலக அரசியல் செல்வாக்கு அதிகரிப்பு, பாரிய வெள்ளப்பெருக்குகள் மற்றும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் நிலநடுக்கம் ஆகியவை அடங்கும்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!