பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து – பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் உள்ள மசூதியில் நேற்று இரவு ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்தார். 5 பொலிஸார் உள்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மசூதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், தொழுகை நடைபெற்றபோது தங்களுக்கு தேநீர் தயாரித்தபோது சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்து விபதத்து ஏற்பட்டுள்ளது.
(Visited 18 times, 1 visits today)