ஸ்பெயினில் பிரபலமான சுற்றுலா தலங்களை குறிவைத்து கொள்ளை!
ஸ்பெயினில் பிரபலமான சுற்றுலாத் தலங்களை குறிவைத்து கொள்ளையில் ஈடுபடும் கும்பல் ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரான்சின் (France) நைஸை (Nice) தளமாகக் கொண்ட இந்தக் குழு motorhome வாகனத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் சுற்றித்திரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வலென்சியா (Valencia) , அண்டலூசியா (Andalusia), பலேரிக் (Balearic) தீவுகள் மற்றும் மாட்ரிட் போன்ற பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்றவியல் குழுவை” சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் பல தவறான அடையாளங்கள் மற்றும் ஆவணங்களை கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து €24,000 ரொக்கம், அத்துடன் மின்னணு சாதனங்கள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இவை அனைத்தும் வாகனத்தின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





