இங்கிலாந்தில் உடைந்த கால்வாய் – வெள்ள அபாய எச்சரிக்கை
இங்கிலாந்தின் ஷ்ரோப்ஷயரில் (Shropshire) உள்ள கால்வாயொன்றில் ஏற்பட்ட பெரிய உடைப்பு காரணமாக வெள்ளம் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விட் தேவாலயத்தின் கெமிஸ்ட்ரி (Chemistry) பகுதியில் உள்ள கால்வாயின் ஓரம் திடீரென சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் படகுகள் தண்ணீரில் சிக்குண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த கால்வாயின் கட்டமைப்பு முழுமையாக சேதமடைந்ததுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் அந்தப் பகுதியைத் தவிர்த்து மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





