சீனாவில் வீட்டிலேயே சொந்தமாக நீர்மூழ்கிக் கப்பல் தயாரித்து சாதித்த விவசாயி
சீனாவில் சொந்தமாக உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பல் வெற்றிகரமாக இயக்கிய விவசாயி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
சீனாவின் அன்ஹுயி மாகாணத்தைச் சேர்ந்த 60 வயது விவசாயி ஜாங் ஷெங்வூ, தனது வீட்டிலேயே சொந்தமாக ஒரு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கி, வெற்றிகரமாக இயக்கியுள்ளார்.
ஏறத்தாழ 7 மீட்டர் நீளமும், 5 டன் எடையும்கொண்ட இந்த கப்பல், இரண்டு நபர்கள் 30 நிமிடங்கள் நீருக்கடியில் பயணிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தனது வீட்டருகே உள்ள ஆற்றில் அந்தக் கப்பலை இயக்கி, அதன் செயல்திறனை அவர் நேரில் நிரூபித்தார்.
இது ஒரு பயனற்ற, ஆபத்தான முயற்சி என மனைவி கடிந்து கொண்டபோதும், நீண்ட கால ஆராய்ச்சி, முயற்சியின் பிறகு கப்பலை உருவாக்கி முடித்ததாக ஷெங்வூ தெரிவித்துள்ளார்.





