நாயும் மனிதனாக மாறலாம் – ChatGPTயில் பெண்ணாக மாறிய நாய்
நாய்கள் மனிதர்களாக எவ்வாறு தோற்றமளிக்கும்? என்பதனை இனிமேல் கண்டறியலாம்.
இதற்கு பதிலைப் பெற நாய்களைச் செல்லப்பிராணிகளாக வைத்திருப்போர் ChatGPTஐ பயன்படுத்துகின்றனர்.
ChatGPTஇல் நாய்களின் புகைப்படங்களைப் போட்டபின் அவற்றை மனிதப் படங்களாக மாற்றி அமைக்கிறது.
ஒரு காணொளியில் Irish setter ரக நாய், சிவப்புத் தலைமுடி கொண்ட பெண்ணாக மாறியது.
இன்னொரு காணொளியில் French bulldog நாய், தாடி வைத்த ஆணாகப் பல்லைக் காட்டிச் சிரித்தது.
ChatGPTஐ வைத்துக் கற்பனைக்கு ஏற்றவாறு படங்களை உருவாக்குவது மிகவும் சுலபம்.
அண்மையில் இது போலவே பலரும் ChatGPTஐ வைத்து Ghibli ரகப் படங்களை உருவாக்கினர். அவை சமூக ஊடகங்களில் பரவின.
(Visited 33 times, 1 visits today)





